RSS

நெல்சன் மண்டேலா காலமானார்

05 டிசம்பர்

படம்

இருண்ட கண்டத்தின் விடிவெள்ளி..
கறுப்பின மக்களின் கலங்கரை விளக்கம்…
ஒளிர மறுத்து அணைந்துவிட்டது.
ஆம்..அழுவதும், தொழுவதும், அடிமைகளாய் அடங்கிக்கிடப்பதும் விதி என்று வீழ்ந்து கிடந்த தென்னாபிரிக்க கறுப்பின மக்களை, எழுவதும், எதிர்த்து நிற்பதும்,தடைகளை தகர்த்து விடுதலை பெறுவதும் காலம் அவர்களுக்கிட்ட கட்டளை என்பதை உணர்த்தி அவர்களின் அடிமை விலங்குடைத்து சுதந்திரக்காற்றை சுவாசிக்க வைத்த நெல்சன் மணே;டேலா என்ற மாபெரும் போரளி, மாபெரும் தலைவர் மறைந்துவிட்டார்.
அந்த மாபெரும் தலைவனின் மறைவையிட்டு தென்னாபிரிக்க மக்கள் மட்டமல்லால், உலக கறுப்பின மக்கள் மட்டுமல்லாமல் உலகில் விடுதலையை நேசிக்கும் அனைத்து இன மக்களும் கலங்கி நிற்கின்றனர்.

1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. 13 குழந்தைகள் கொண்ட
குடும்பத்திலிருந்து முதன் முதலாக பாடசாலைக்குச் சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே படித்து வந்தார். கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, தென்னாபிரிக்கா மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.
கறப்பின மக்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னாபிரிக்காவை மிகச் சிறுபான்மையாக உள்ள வெள்ளையின நிறவெறி அதிகார வாக்கம் அடக்கியாண்டதை எதிர்த்து நெல்சன் மண்டேலா தனது 21 வது வயதில் போர்கொடி தூக்கினார்;.தன்னுடைய வயதையுடைய கறுப்பின இளைஞர்களை திரட்டி தென்னாபிரிக்காவின் மண்ணின் மைந்தர்களான கறுப்பின மக்களுக்கு ஆக்கிரமிப்பாளராக வந்து குடியேறிய வெள்ளை இனவாதிகள் செய்யும் கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டிய தேவையை உணர்த்தினார்.அடக்குமுறையாளர்களுக்கு அடிபணிந்து வாழ்வதால் மாற்றம் வந்துவிடாதென்பதையும், எதேச்சாதிகாரத்துக்கு அடிபணியாது துணிவுடன் எதிர்த்து நின்று போராடுவதன் மூலம் தான் விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அவர் புரியவைத்தார்.
1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய வெள்ளை இனவாதஅரசாங்கம் கறுப்பின மக்களுக்கெதிராக முன்பிருந்த அரசாங்கங்களை விட அதிகளவுக்கு அடக்குமுறையை திணித்தது. மண்டேலா அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து அந்த அரசாங்கத்தின இனஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
ஆனால் நிறவெறியும் ஒடுக்குமுறையும் எல்லைமீறிச் செல்வதை கண்டு சீற்றம் கொண்ட மண்டேலா முழுநேரமாக அரசியலுக்குள் புகுந்தார். விரைவிலேயே கறுப்பின மக்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான ‘ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
அதுவரை மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டுவந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை நெல்சன் மண்டேலா தலைமையேற்றதும் வெள்ளை நிறவெறி ஆட்சியை எதிர்த்து அறவழி போராட்டங்களை நடத்தும் போராட்ட அமைப்பாக மாற்றினார். அவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதையும் மகக்ள் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவதையும் கண்ட வெள்ளை நிறவெறி; அரசாங்கம் 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என்று குற்றம் சாட்டி நெல்சன் மண்டேலாவையும் 150 க்கும் மேற்பட்ட அவரது தோழர்களையும் கைது செய்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்கும் சர்வதேச அழுதங்களுக்கும் பின்பு 1961ல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 ம் ஆண்டு; கறுப்பின மக்களுக்கு தனியான கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக மண்டேலா ளூயசிநஎடைடந சார்பெவில் நகரில் ஊர்வலம் ஒன்றை; நடாத்தினர். இந்த ஊர்வலத்தை கலைப்புதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தென்னாபிரிக்காவில் பெரும் கொந்தழிப்பை ஏற்படுத்திய மட்டுமல்லாமல் நெல்சன் மண்டேலாவின் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது
ஆம் உரிமைகளை யாசித்துப் பெறமுடியாது பேராடித்தான் பெற வேண்டும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்
அது வரை மென்போக்கு அரசில் கட்சியாக இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆயுதப் போராட்ட விடுதலை அமைப்பாக மாறியது.
ஏற்கனவே லத்தீன் அமெரிக்காவில் சேகுவராவால் நடத்தப்பட்ட அரசுக்கு எதிரான கெரில்லா போர் முறையை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தேர்ந்தெடுத்தது

1961ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது.அதன் பின் தொடர்ச்சியாக வெள்ளை நிறவெறி அரசாங்கப் படைகள் மீதும் அதன் நிர்வாக கட்டமைப்புகள் மீதும் நடத்தப்பட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களால் தென்பிரிக்க நிறவெறி அரசு ஆட்டங்கண்டது.1961ல் நெல்சன் மண்டேலாவுக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தது.
ஆனாலும் அவர் தலைமை மறைவாக இருந்து விடதலைப் பேரை வெற்றிகரமாக நடத்தினார்.மண்டேலாவின் எழுச்சி ஆபிரிக்காவை தாண்டி அமெரிக்க ஐரொப்பா மற்றும் ஆசிய கண்டங்களிலும் எதிரொலித்தது..அவரது பேராட்டத்துக்கான ஆதரவுத்தளம் விரிந்தது.
ஆடக்குமுறைக்கு உள்ளான மக்களுக்கும் தங்களின் விடுதலைக்காக பேராடும் மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத அமெரிக்கா வழக்கப்போல தென்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபடுகிறது என்றும் அது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் நெல்சன் மண்டேலா ஒரு பயங்கரவாதி என்றும் பிரகடனப்படுத்தியது.அதேரிக்காவின் நேச நாடுகளும் அதை பின்பற்றின. ஆனால் அவற்றைவிட அதிகமான நாடுகளும் பெரும்பாலான உலக மக்களும் அவரை ஒரு விடுதலைப் போராளியாகவே பார்த்தனர்.

1962ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி மண்டேலா தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினர் அவரையும் அவரது 10 முக்கிய தோழர்களையும் சுற்றிவளைத்து கைதுகைது செய்தனர். அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தது அரசைக் கவிழ்க்க முயன்றது அமைதியைக் குலைத்தது, கலகத்தை உருவாக்கியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டன. 1964-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12-ம் திகதி மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
;உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.
பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டார். 1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே அவர் சென்றதால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மண்டேலாவை கைது செய்ததால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்டம் ஒய்ந்துவிடவில்லை.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னியின் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
‘மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்’ என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுத்தலைவராக பதவிக்கு வந்த டெக்ளார்க் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

11.2.1990 அன்று அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.அதன்படியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்..அப்போது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதுமண்டேலாவின் விடுதலையை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன.
1994ம் ஆண்டு மே 10 ந் திகதி அவர் தென்னாப்பிரிக்காவின் முதன் முதல் கறுப்பின அரசுத்தலைவர் ஆனார்.1999 இல் பதவியை விட்டு விலகிய அவர் 2வது முறை அரசுத்தலைவர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.
உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் ‘நேரு சமாதான விருது’ ‘பாரத ரத்னா’ விருது மகாத்மா காந்தி சர்வதேச விருது உட்பல பல சர்வதேச விருகளைப்பெற்ற நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.
இன்று நெல்சன் மண்டேலா என்ற மனிதர் மறைந்துவிட்டார்.அவரது உயிர் மூச்சு ஓடங்கிவிட்டது.ஆணால் எழுப்;பிய விடுதலைக்குரல் ஓய்ந்துவிடவில்லை புரட்சித்தீ அணைந்துவிடவில்லை.
ஏனென்றால ;உலகில் இன்னமும் நிறவெறியும் இனவெறியும் ஒழிந்துவிடவில்லை.பாரபட்சமும் பிறப்பைக் கொண்டும் நிறத்தைக் கொண்டும் மனிதனை மனிதம் இழிவுசெய்து கெடுமையும் மறைந்துவிட வில்லை.

11.2.1990ல் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வெளியே வந்த போது ‘இனவெறி நிறவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது என்றும் கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்த வார்த்தைகள் இன்னும் அர்த்த முள்ளவையாக தென்னாபிரிக்க மக்களினது மட்டுமல்லாமல் விடுதலை வேண்டி நிற்கும் உலகிலுள்ள அனைத்து மக்களினதும் குரலாக அது என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நெல்சன் மண்டேலா என்ற மாமனிதனுக்கு விடுதலைiயும் சமத்துவத்தையும் மாநிடத்தையும் நேசிக்கும் உலக மக்களுடன் கைகோர்த்து நாமும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் திசெம்பர் 5, 2013 in Uncategorized

 

1 responses to “நெல்சன் மண்டேலா காலமானார்

  1. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்

    திசெம்பர் 6, 2013 at 12:24 முப

    வணக்கம்
    அந்த மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்….பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

     

பின்னூட்டமொன்றை இடுக